புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக பொதுமக்களுக்கு பாரிய ஆபத்து: பிரபா கணேசன் தெரிவிப்பு!samugammedia

புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக பொதுமக்களுக்கு பாரிய ஆபத்து இருப்பதாக முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணி நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்

மேலும், புதிய பயங்கரவாத தடைச்சட்டம் நாடாளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்குத் தயாராக இருக்கின்றது எனவும்  இந்த சட்டத்தைப்பற்றி பொதுமக்கள் பலவிதமான அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தடைச்சட்டத்தின் ஊடாக பொதுமக்களுக்கு பாரிய அளவு ஆபத்து இருக்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும் என்றும்  பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

1979ஆம் ஆண்டு தற்காலிகமாகக் கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம், இன்று அதி பயங்கரமான தோற்றத்திலே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது எனவும் இதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் தற்பொழுது சிங்கள மக்களுக்கு எதிராகவும் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும்  பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *