விமல் வீரவன்ச போராட்டத்துக்கு அழைப்பு: நாட்டு மக்களை ஒன்றிணையுமாறும் கோரிக்கை! samugammedia

அரசாங்கத்துக்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் வகையில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

நுகேகொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதுதொடர்பில் விமல் வீரவன்ச மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை அமுல்படுத்துவதை தவிர மாற்றுத்திட்டங்கள் ஏதும் அரசாங்கத்திடம் கிடையாது.

தேசிய தொழிற்துறையை மேம்படுத்துவது தொடர்பில் நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டங்களும் செயற்படுத்தப்படவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைய தேசிய வளங்களையும்,அரச நிறுவனங்களையும் விற்று பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண முடியாது.

மக்கள் போராட்டத்தை முடக்குவதற்காகவே உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக போராட்டத்தில் ஈடுபடும் சகலரும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுவார்கள்.

இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற இடமளிக்க கூடாது. நாட்டு மக்கள் சகலரும் ஒன்றிணைந்து கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply