ஐ.எம்.எப். வசந்தகால கூட்டங்களில் சீன அதிகாரிகள்: இலங்கை தொடர்பில் கலந்துரையாடல்! samugammedia

வொஷிங்டனில் நடைபெறும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வசந்தகால கூட்டங்களில் சீனாவின் உயர் அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சீன மக்கள் வங்கியின் ஆளுநரான யி கேங், துணை ஆளுநருடன் இந்த வாரம் கூட்டங்களில் கலந்துகொள்வார் என்று அந்த நாட்டு மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அதேநேரம் நிதியமைச்சர் லியு குன்னும் இந்த வாரம் வொஷிங்டனுக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்போது சாம்பியா, இலங்கை மற்றும் கானா போன்ற நாடுகளின் கடன்கள் குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply