சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயகொடி கல்முனைக்கு விஜயம்! samugammedia

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அழைப்புக்குக்கு அமைவாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி அவர்கள் இன்று 2023.04.11 ஆம் திகதி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

 கடந்த 2023.04.03 ஆம் திகதி சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆயுர்வேத உற்பத்திகளை நவீனமயப்படுத்தல் மற்றும் பாரிய ஆயுர்வேத மூலிகை தோட்டத்தை(herbal Gardening) அமைத்தல் போசனை செற்றிடங்களை விரிவுபடுத்துதல் அரசாங்க மற்றும் தனியாரின் பங்களிப்புடன் (PPP)உற்பத்திகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக குறித்த செயற்றிடங்களையும் பிரேரணைகளையும் நேரடியாக பார்வையிடுவதற்காகவும் ஏனைய பிரதேசங்களிலும் இவ்வாறான செயற்பாடுகளை அமுல்ப்படுத்து தொடர்பில் ஆராய்வதற்காகவும் இன்று இராஜாங்க அமைச்சர் தலைமையிலான குழுவினர் பணிமனைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 இக்கலந்துரையாடலில் பணிமனை சார்பில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களுடன் பிரதிபணிப்பாளர் எம்.பீ.ஏ.வாஜித் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.சீ.எம் மாஹிர் கல்முனை பிராந்திய ஆயுர்வேத பொறுப்பு வைத்திய அதிகாரி  எம்.ஏ.நபீல் Dr.T.R.S.T.S ரஜப் உள்ளிட்ட பிரிவுத் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply