புத்தாண்டு அனைவருக்கும் ஆறுதலை தரும்: ஜனாதிபதி வாழ்த்துச் செய்தி…! samugammedia

இந்த புத்தாண்டில் அனைவருக்கும் சிறு ஆறுதல் தருகின்ற சூழல் உருவாக்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி  இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த வருடம் சித்திரைப் புத்தாண்டு உதயமான போது  நாம் அனைவரும் மிகப்பெரிய நெருக்கடிக்குள் சிக்கியிருந்தோம்.  புத்தாண்டு கொண்டாட்டம் ஒருபுறமிருக்க, அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதே மிகப் பெரிய சவாலாக இருந்தது. ஆனால் இப்புத்தாண்டில் அனைவருக்கும் சிறு ஆறுதல் தருகின்ற சூழல் உருவாக்கியுள்ளது.  

அடுத்த புத்தாண்டில், இதனை விடவும் சௌபாக்கியத்தையும் செழிப்பையும் ஏற்படுத்திக் கொள்ளவே நாம் முயற்சிக்க வேண்டும். நாம் அனைவரும் ஒருதாய் மக்களாக  ஒரே பாதையில் பயணித்தால் அந்த இலக்கு சாத்தியமாகும்.

இன, மத, கட்சி, நிற பேதங்களை புறந்தள்ளிவிட்டு புதிய  நோக்குடன் முன்னோக்கிப் பயணிக்க இந்த சித்திரைப் புத்தாண்டில் சங்கட்பம் கொண்டால் இந்த புத்தாண்டு மட்டுமன்றி, எதிர்காலத்தையும் நலம் மிக்கதாக அமைத்துக்கொள்ள முடியும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply