முல்லை மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கலை கலாசார நிகழ்வுகள்!samugammedia

சித்திரை புத்தாண்டை தொடர்ந்து எதிர்வரும் 15/04/2023 அன்று முல்லைத்தீவு மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முதன் முறையாக கலை கலாசார நிகழ்வுகள் முல்லைத்தீவு பிரதேச சபை மைதானத்தில் மிகவும் கோலாகலமாக இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வுகளான கும்மி, கோலாட்டம் உள்ளடங்களாக மாலை கட்டுதல், கோலம் போடுதல், சறுக்கு மரம் ஏறுதல், பணிஸ் உண்ணுதல், முட்டி உடைத்தல், தண்ணீர் குடம் கொண்டு செல்லல்,யானைக்கு கண் வைத்தல், சாக்கோட்டம், கிடுகு இழைத்தல், பலூன் ஊதி உடைத்தல்,விநோத உடைப்போட்டி, தலையணை சண்டை,மொதுவான சைக்கிள் ஓட்டம் என பல்வேறு நிகழ்வுகள்  முல்லைத்தீவு மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருடைய ஒழுங்குபடுத்தலில் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளதாக முல்லைத்தீவு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

Leave a Reply