கசிப்பு வியாபாரியிடம் 9 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்சமாக வாங்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை கடவலவெவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கசிப்பு நபரிடம் தடையின்றி கடத்தலை தொடர மூன்று போத்தல்கள் மதுபானம் கோரப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தன்னிடம் மதுபானம் இல்லாததால், மூன்று போத்தல்களின் பெறுமதிக்கு பணம் தர முடியுமென கடத்தல்காரர், பொலிஸாரிடம் கூறியதாக தெரிவிக்கபடுகின்றது.
அதற்கு இணக்கம் தெரிவித்த பொலிஸார் பணத்தை பெற்றுக் கொண்டபோது சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.