வவுனியா ஆலயங்களில் இடம்பெற்ற புத்தாண்டு சிறப்பு பூஜை வழிபாடுகள்!samugammedia

நாடு முழுவதும் புதுவருடப் பிறப்பு மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதற்கமைய வவுனியா இந்து ஆலயங்களில் இன்று (14.04.2023) காலை விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.
வவுனியா கந்தசாமி ஆலயம் மற்றும் குட்சைட் வீதி கருமாரி அம்மன் ஆலயம் ஆகிய ஆலயங்களில் விசேட அபிசேக பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன்வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தில் இரதோட்சவமும் இடம்பெற்றிருந்தது
புத்தாண்டை முன்னிட்டு ஆலயங்களில் விசேட தீப ஆராதனைகளுடன் புதுவருட வழிபாடுகள் இடம்பெற்றதுடன், கலந்து கொண்டோர் அமைதியாக தமக்குள் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.

Leave a Reply