கீரிமலை கடற்கரையில் நாவலர் பெருமானின் உருவச்சிலை திறப்பு!samugammedia

சிவபூமி அறக்கட்டளையினரின் ஏற்பாட்டில் வலி வடக்கு பிரதேச சபையின் அனுசரனையுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை கடற்கரையில் புதிதாக அமைக்கப்பட்ட  நாவலர் பெருமானின் உருவச்சிலை இன்று மாலை 5மணிக்கு திறந்துவைக்கப்பட்டது.

சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகனால் நாவலர் பெருமானின் உருவச்சிலை திறந்துவைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்  சோ.சுகிர்தன் மற்றும் சமயத்  தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply