யாழில் இன மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு..!samugammedia

யாழ். கிளிநொச்சி மக்கள் பணிமனையின் எற்பாட்டில் இன நல்லிணக்கத்தையும் மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான எடுத்துக்காட்டாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நேற்றையதினம் 14.04.2023 யாழ். ஸலாமிய்யா அரபுக் கல்லூரியில், யாழ். கிளிநொச்சி மக்கள் பணிமனை தலைவர் மெளலவி ஏச்.சுபியான் தலைமையில் நடைபெற்றது 

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு இப்தார் நோன்பு திறப்பினை ஆரம்பித்து வைத்தார்.
இதில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்அம்பலவாணன் சிவபாலசுந்தரன், மற்றும், சர்வமததலைவர்கள், பள்ளிவாசல் மெளலவிமார்கள், இஸ்லாமியர்கள் மற்றும்  சமூகநலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply