இன்று ஜி.எல்.பீரிஸே பிரதமர்..! பதவிகளுக்காக அரசியல் நடத்தவில்லை – ஆதங்கப்படும் டிலான் பெரேரா!samugammedia

பபதிகளுக்காக அரசியல் நடத்தவில்லை என்றும் ஆனால் அன்று டலஸ் அழகப்பெருமவின் பெயர் முன்மொழியப்படாமல் இருந்திருந்தால் இன்று ஜி.எல்.பீரிஸே பிரதமாக இருந்திருப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

தமது அணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளுக்காக அரசியல் நடத்துவது கிடையாது என்றும்  கொள்கை அரசியலையே முன்னெடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பதவிகள் தேவையில்லை என்று தீர்மானித்த பின்னரே மொட்டு கட்சியில் இருந்து வெளியேறியதாகவும் குறிப்பிட்ட டிலான் பெரேரா

பேராசிரியர் ஜி.எல்.பீரிசுக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் எனக் கூறப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்வுக்கான வாக்கெடுப்பின்போது டலஸின் பெயரை அவர் முன்மொழியாமல் இருந்திருந்தால் தற்போது பீரிஸ்தான் பிரதம என்றும் டிலான் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்

Leave a Reply