'தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம்' அடையாள உண்ணாநோன்புப் போராட்டத்திற்கு அழைப்பு…!samugammedia

“தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம் “என்ற தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்புப் போராட்டமும் தமிழர் தாயகம் தழுவிய மாபெரும் கையெழுத்துப்போரும் நாளை (16.04.2023) ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிக்கு நல்லூர் நல்லை ஆதீன முன்றலில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சமயத்தலைவர்கள், தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் என பலருடைய பாரிய ஒத்துழைப்புடன் இந்த அடையாள உண்ணாநோன்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தமிழர் மரபுரிமைகளை அழியவிடாது பாதுகாக்க குறித்த எழுச்சிப்போராட்டத்தில் பேதங்களை கடந்து தமிழராக அனைவரும் ஒன்றுபட்டு தமிழனத்துக்கு எதிராக இடம்பெறும் செயற்பாடுகளை கண்டிப்பதுடன், எமது நியாயமான கோரிக்கைகளை அரசுக்கும் சர்வதேசத்துக்கும் தெரியப்படுத்த வேண்டும் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *