ஆசிரியரின் மோட்டார் சைக்கிளை திருடி பேஸ்புக்கில் விற்பனைக்காக விளம்பரம் செய்த மாணவன்! samugammedia

ஆசிரியர் ஒருவரின் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளொன்று, அவரது வகுப்பு மாணவர் ஒருவரால் பேஸ்புக்கில் விற்பனைக்காக பதிவிடப்பட்டுள்ளதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் (14) இரவு நாரம்மல பகுதியில் உள்ள பாடசாலை ஆசிரியர் ஒருவரின் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள், அவரது வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது திருடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் அவர் நாரம்மல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன்,   திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் குறித்து தனது வகுப்பு மாணவர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இதனால் கவலையடைந்த அவரது மாணவர் ஒருவர், தனது முகநூல் பக்கத்தில் குறித்த மோட்டார் சைக்கிள் விற்பனை தொடர்பாக வெளியிட்ட விபரங்களை பார்த்தபோது, தான் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை போன்றே விற்பனைக்கு விளம்பரப்படுத்தப்பட்டுள்ள சைக்கிளும் காணப்பட்டதை ஆசிரியர் அவதானித்துள்ளார்.

இது தொடர்பாக தகவல் வழங்கப்பட்டதையடுத்து, பன்னல மாகந்துர பிரதேசத்தில் உள்ள குறிப்பிட்ட இடமொன்றுக்கு மோட்டார் சைக்கிள் கொண்டுவரப்பட்டபோது, மோட்டார் சைக்கிளுடன் அதனை கொண்டு வந்த நபரையும் கைதுசெய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *