வலிவடக்கு முன்னாள் தவிசாளரின் வீட்டின் முன் பெண் உத்தியோகஸ்தர் தீக்குளித்தது ஏன்? மர்ம முடிச்சு அவிழுமா? samugammedia

வலி வடக்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் சுகிர்தனின் வீட்டில் பெண்ணொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் நேற்றிரவு (16) இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண், நேற்றிரவு முன்னாள் தவிசாளரின் வீட்டுக்கு முன் வந்து, தனக்குத் தானே தீ மூட்டியுள்ளார். தீ அணைக்கப்பட்டதையடுத்து கிணற்றினுள் குதித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில்   காப்பாற்றப்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது குறித்த பெண் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வலி வடக்கு பிரதேச சபையில் பணியாற்றும் உத்தியோகஸ்தர் என்பதுடன், கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அண்மைக் காலமாக பிரிந்து வாழும் கணவனிடமிருந்து  விவாகரத்து பெறுவதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என தெரியவருகிறது.

இந்த பெண்ணுக்கும் முன்னாள் தவிசாளரக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் காணப்பட்டதாகவும் அதன் காரணமாக நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என அயலவர்களால் சந்தேகிக்கப்படுகிறது.

இதேவேளை வலி வடக்கு முன்னாள் தவிசாளரின் மனைவி நீண்ட காலமாக வெளிநாட்டில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *