மக்கள் மத்தியி்ல் மத முரண்பாடுகள் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறதா- கிராமிய உழைப்பாளர் சங்க தலைவர் கேள்வி…!samugammedia

மக்கள் மத்தியி்ல் மத முரன்பாடுகள் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது நாம் அரசியல் ரீதியாக போராடும் நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் ஏற்புடையதல்ல
என கிராமிய உழைப்பாளர் சங்க தலைவர் இன்பம் தெரிவித்தார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

எமது விடுதலைக்கான போராட்டத்தில் வெவ்வேறு பிரிவினராக மக்கள் இருந்த போதிலும் தமிழ் மக்கள் என்ற ரீதியில் ஒன்றாக இணைந்து மாபெரும் போராட்டத்தை வழிநடத்தியிருந்தனர்.

அண்மைக் காலமாக மத ரீதியாக பிளவுபடும் நிலை காணப்படுகிறது. மத ரீதியாக பிளவுபடுவதை வன்மையாகக் கண்டிப்பதுடன் எதிர்க்கின்றோம்.

ஒவ்வொரு மதத்தினரும் மாறி மாறி கடவுள் சிலைகளை வைப்பது மற்றும் உடைப்பது போன்றன ஆரோக்கியமற்றது. இது எங்களுடைய ஐக்கியத்தை பலவீனப்படுததும் செயற்பாடாகவே அமைகின்றது.

இவ் விடயங்களில் மக்களை  முரண்படுத்தி குளிர்காய்கின்ற நிலை காணப்படுகின்றது. ஒரு காலத்தில் அனைத்து வேற்றுமைகளையும் கடந்து  தமிழ்த்தேசியம் என்ற ரீதியில் மிக வலிமையாக இருந்த மக்கள் சமூகம். .

எனவே அண்மைக் காலமாக இவற்றையெல்லாம்  சுக்குநூறாக உடைப்பதற்கான நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுகின்றது. ஆகவே மக்கள் இவற்றினுள் அகப்பட்டு பலியாகாமல் அவதானமாக இருக்க வேண்டும்  என்றார்.

Leave a Reply