சீனாவுக்கு முதற்கட்டமாக ஐநூறு முதல் ஆயிரம் வரையான குரங்குகள் அனுப்பப்படும்: விவசாய அமைச்சர் தகவல்!samugammedia

சீனாவுக்கு முதற்கட்டமாக 500 முதல் ஆயிரம் வரையான குரங்குகளே அனுப்பப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது குறித்து மேற்கொள்ளப்படும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே விவசாயம் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

குரங்குகளை வழங்குமாறு சீனாவால் எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் மூன்று சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதனை அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அமைச்சுக்களின் அதிகாரிகளைக்கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குரங்குகளை அனுப்புவதா இல்லையா என்பது தொடர்பில் இந்த குழுவே தீர்மானிக்கும்.

முதற்கட்டமாக ஒரு லட்சம் குரங்குகளை அனுப்புவதாக பலரும் விமர்சிக்கின்றனர். ஆனால்,அவ்வாறு இல்லை. முதற்கட்டமாக 500 முதல் ஆயிரம் வரையான குரங்குகளே கோரப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply