பௌத்த பிக்குகளுக்கு ஒரு சட்டம்- சைவ மக்களுக்கு ஒரு சட்டம்.! – கண்ணை மூடியுள்ளாரா ரணில் – எம்.பி கேள்வி! samugammedia

நாட்டில் தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற வடகிழக்கில் புத்தர் சிலைகளை நிறுவ முடியுமானால் 90 சதவீதமான சைவ மக்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் நாகபூசணி அம்மன் சிலையை அமைத்து ஏன் வழிபாடு செய்யக்கூடாதென யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணம் பண்ணை சுற்று வட்டப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நயினாதீவு நாகபூசணி அம்மன் சிலையினை அகற்றுவதற்கு பொலிசார் தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த விடயம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில் சித்தார்த்தன் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்.

பௌத்த பிக்குமார்கள் குழுவாக வந்து எந்த சட்ட திட்டங்களுக்கும் மதிப்பளிக்காமல் அத்துமீறி சிலைகளை நிறுவி கொண்டிருப்பதாகவும் குறிப்பாக விகாரைகளை விஸ்தரிப்புக்காக தனியாருக்கு சொந்தமான காணிகளை சுவீகரிக்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்துக்கள் தமது தெய்வங்களுக்கான் சிலைகளை நிறுவுவதாக இருந்தால் ஆகம விதிபடி பிதிஸ்டை செய்து மேற்கொள்ள வேண்டிய கருமங்கள் அதிகமுள்ளன.

ஆனால் சிங்கள பௌத்த இனவாதிகள் பௌத்தமயமாக்கல் என்ற தீவிர எண்ணத்துடனும் சிங்கள இனப்பரம்பலை பெருக்குதல் என்ற நோக்கத்துடனும் வடகிழக்கை ஆக்கிரமிக்கும் நோக்கல் புத்தர் சிலைகளை நிறுவி வருவதாக சித்தார்த்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

முற்று முழுதாக இந்துமக்களை கொண்ட பிரதேசத்தில் அம்மன் சிலையொன்றை நிறுவக்கூடாது என்று பொலீசார் சட்டத்தை கையில் எடுப்பது இலங்கையில் மத பாகுபாட்டையும் இன முறுகல்களையும் கொண்டுவரும் செயலாகும் என்றும் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply