தேசிய அரசாங்கத்துக்கு பச்சைக்கொடி காட்டிய மனோ?.. வெளியான தகவல்…!samugammedia

ஏப்ரல் 25 ஆம் திகதி  நாடாளுமன்றத்தில் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பிரேரணையை நான் கூட்டாக முன்வைக்க உள்ளதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை. இது திரித்து கூறப்படும் பொய்யான செய்தி. ஆளுந்தரப்பில் இருந்து எதிரணிக்கு வந்துள்ள ஒரு முன்னாள் அமைச்சர் ஒருவருக்குச் சொந்தமான இணையத்தளத்திலேயே முதலில் இந்தச் செய்தி வந்தது.’
என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சியாகவே தற்போது தமிழ் முற்போக்குக் கூட்டணி இருக்கின்றது.

தேசிய அல்லது எந்தவொரு அரசாங்கத்திலும் அங்கம் வகிப்பது தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அரசியல் குழு கூடிப் பேசவும் இல்லை. எந்தவித முடிவும் எடுக்கவும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply