மடுகாட்டில் காணாமல்போன காவல்துறை உத்தியோகத்தர்! samugammedia

மன்னாரில் காவல்துறையின் சிற்றுண்டிச்சாலைக்கு விறகு எடுப்பதற்காக கடந்த 19 ஆம் திகதி மதியம் மடு காட்டுப்பகுதிக்கு சென்ற காவல்துறை சார்ஜன்ட் ஒருவர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மன்னாரில் கடமையாற்றும் காவல்துறை சார்ஜன்ட் ஒருவர் காணாமல் போயுள்ளார். இந்த காவல்துறை சார்ஜன்ட் மடு காட்டில் காணாமல் போயுள்ளதாக அப்பகுதியின் உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காணாமல் போன சார்ஜென்டை காவல்துறை குழு தேடியும் கிடைக்கவில்லை.

மடு காவல்துறை அதிகாரிகள் குழுவும் மன்னார் தலைமையக காவல்துறை அதிகாரிகள் குழுவும் இணைந்து காட்டில் காணாமல் போன காவல்துறை சார்ஜனைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

Leave a Reply