கிளிநொச்சி A9 வீதியில் விபத்து – ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த நால்வர் படுகாயம்! samugammedia

 கிளிநொச்சி நகரில் A9 வீதியில் இடம் பெற்ற விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த நால்வர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று பிற்பகல் 4.30 மணியளவில் வலயக்கல்வி அலுவலகம் முன்பாக இடம்பெற்றது.

கிளிநொச்சி நகரிலிருந்து முறிகண்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிரே பயணித்த ரிப்பர் வாகனத்துடன் மோதியது.

இதன் போது, ஐவரை ஏற்றியவாறு மோட்டார் சைக்கிள் பயணித்துள்ளது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நால்வர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் சிறார்கள் எனவும், மற்றயவர் வயது முதிர்ந்த பெண் அடங்கலாக விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply