காட்டு யானைகள் தாக்குதலுக்கு உள்ளான மல்போருவ கல்லூரிக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அவசர விஜயம்! samugammedia

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் நேற்று (20) பிற்பகல் கல்லூரிக்கு அவசர கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டு திருகோணமலை மல்பொறுவ கிராமத்திலுள்ள பாம்புருகஸ்வெவ கல்லூரியின் மீது காட்டு யானை தாக்குதலால் நிலத்தை இழந்த குடும்பங்களுக்கு ஏற்பட்ட சேதங்களை நேரில் பார்வையிட்டார். 

யான் ஓயா திட்டம் மூலம் மீள்குடியேற்றப்பட்ட இக் கிராமம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்த காட்டு யானை தாக்குதலினால் கல்லூரியை சுற்றி கட்டப்பட்டிருந்த பாதுகாப்பு யானை வேலி, பாடசாலை பாதுகாப்பு வேலி மற்றும் கல்லூரியின் பல கட்டிடங்களும் சேதமடைந்தன.

கண்காணிப்புச் சுற்றுப்பயணத்துக்குப் பிறகு, திரண்டிருந்த கிராம மக்களுடன் ஆளுனர் நட்பு ரீதியாகவும் உரையாடினார்.

யானை வேலியை பாதுகாக்க நிரந்தர பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.

அப்போது, இந்த பகுதியில் சிவில் பாதுகாப்பு காவலர் பணிமனையை விரைவில் ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் தெரிவித்தார்.

அது தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சேதமடைந்த கட்டிடத்தை புனர்நிர்மாணம் செய்ய உரிய அதிகாரிகளுக்கு ஆளுனர் இதன் போது பணிப்புரை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *