யாழில் பாடசாலை மாணவிகளுடன் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட ஆசிரியர்…! களத்தில் இறங்கிய முக்கிய தரப்புக்கள்..!samugammedia

யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் பாலியல் ரீதியான சேட்டைகளில் ஈடுபடுகின்றார் என எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பாடசாலையில் உயர்தர வகுப்பில் கற்கும் மாணவிகளுக்கு கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியரொருவர், மாணவிகளுடன் இரட்டை அர்த்த வசனங்கள் பேசுதல்,பாலியல் ரீதியான சேட்டைகளில் ஈடுபடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் மாணவி ஒருவர் பெற்றோர்களிடம் முறையிட்ட போது பெற்றோர் பாடசாலை அதிபரை நேரில் சந்தித்து ஆசிரியரின் செயற்பாடு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர்.

இதன்போது பாடசாலை அதிபர் , சாதகமாக நடந்து கொள்ளாது முறையிட்ட பெற்றோருடன் முரண்பட்டதையடுத்து பெற்றோர் மாணவியின் பாடசாலை விலகல் பாத்திரத்தை வாங்கி கொண்டு மாணவியை வேறு பாடசாலையில் இணைத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் , மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் அவதானம் செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *