நெடுந்தீவு கொடூரக்கொலைகள்- பொலிஸார் அசமந்த போக்கு..! குற்றம் சுமத்தும் மக்கள்.! samugammedia

நெடுந்தீவு இன்று காலை 5 பேர் வெட் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிசார் துரித விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
படுகொலை சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருந்ததுடன் இன்று காலை சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன.

எனினும் இதுவரை அடுத்த கட்ட நடவடிக்கைகள் எவை முன்னெடுப்பதில் பொலிசார் தாமதம் காட்டி வருவதாக அங்கிருந்து செய்திகள் கிடைத்துள்ளனர்.

தற்போது அதாவது 2.30 மணியளிவிலே யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் நீதிபதிகள் யாழில் இருந்து நெடுந்தீவு நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பொலிசாரிடம் இந்த கொலை தொடர்பான விபரங்களை கோரிய போது விசாரணைகளின் இறுதியில் அறிவிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெடுந்தீவு மாவிலி இறங்குறையினை அண்மித்தவாறு அமைந்துள்ள  வீடொன்றில் இருந்து ஐந்து பேர் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ள நிலையில் இந்த கொடூர படுகொலை சம்பவம் இலங்கையில் பாரிய அச்சநிலையை தோற்றுவித்துள்ளது.

இந்நிலையில் படுகொலை நேற்றிரவு இடம்பெற்றிருந்ததுடன் இன்று முற்பகல் 11 மணிவரை வீட்டிலிருந்து எவரும் வெளியில் வராத நிலையில் சிலர் உள்ளே சென்று பார்த்த போது நால்வர் சடலமாகக் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply