பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் சாத்தானை வைக்கவில்லை…!அம்மன் சிலையினை வைப்பதற்கு முழுமையான உரிமை உள்ளது- சிவஞானம் ஆதங்கம்!samugammedia

பண்ணை சுற்றுவட்ட பகுதியில் சிலை வைப்பதற்கு முழுவதுமான உரிமை இருப்பதாகவும் தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ர உப தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழில் தனது அலுவலகத்தில் ஊடக சந்திப்பொன்றை நடாத்திய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பண்ணையில் சுற்றுவட்டம் அமைத்தது நான். அதில் வைக்கப்பட்ட சிலையானது எந்தவிதமான இடையூறுகளுமின்றியே உள்ளது. அதில் சிலை யாரும் வைக்கலாம். அங்கு தெய்வத்திற்கே சிலை வைக்கப்பட்டுள்ளது மாறாக சாத்தனுக்கன்று.

குறித்த இடத்தில் நாகபூசணி அம்மன் சிலையினை வைப்பதற்கான அனுமதியினை சிலர் நாடியதை அறிந்திருந்தேன் அதன் உறுதிப்பாடு தெரியவில்லை.

அவ்வாறு வைப்பதானால் முறைப்படி வைத்திருக்கலாம். ஏனெனில், இவ்வாறான பல நடைமுறை சிக்கல் வரும் என்பதையும் மறுப்பதிற்கில்லை. என்ன தான் இருப்பினும் அந்த சிலையினை வைப்பதற்கான உரிமை முழுவதுமாக எமக்குண்டு.

வேலன் சுவாமிகளின் கருத்துக்களை நான் கணக்கெடுப்பதில்லை. இங்கு மதத்துடன் அரசியல் செய்பவர்களே அதிகமாக காணப்படுகின்றனர். ஒன்றில் அரசியல் செய்ய வேண்டும் அல்லது மதம் தொடர்பாக பேச  செய்ய வேண்டும்.

அத்துடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கூட்டத்தில் மாவை. சேனாதிராஜா கலந்து கொண்டமை அவரது தனிப்பட்ட விடயம். அதை நான் சரி என்றும் குறை மாட்டேன் பிழை என்றும் கூறமாட்டேன்.

அத்துடன் தற்பொழுது ஒளிபரப்பாகும் சீன தொலைக்காட்சியினை மக்கள் புத்தியசாலிகளாக இருந்தால் பார்க்கமாட்டார்கள். அவ்வாறு பார்த்தாலும் அதில் கூறப்படும் கருத்துக்களை ஒவ்வொருவர்களிற்கிடையில் பரப்பாமல் இருப்பதே நல்லது எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *