திருமலை மக்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் -தௌபீக் எம்.பி! samugammedia

குடாக்கரை மக்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினை தொடர்பான மக்களுடனான கலந்துரையாடல்  பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் எம்.பி அவர்களது பங்கேற்புடன் சீனக்குடா  திமுத்துகம விகாரையில் இன்று (23) இடம்பெற்றது.  

இதன் போது சின்னம்பிள்ளைசேனை, கருமலையூற்று, வெள்ளைமணல், நாச்சிக்குடா, சீனன்குடா, கவாட்டிக்குடா, கப்பல்துரை, முத்துநகர், பாலையூத்து, மட்கோ போன்ற பிரதேசங்களில் காணப்படுகின்ற காணிகளை இலங்கை துறைமுக அதிகார சபை உரிமைகோரும் விடயம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் எம்.பி அவர்கள் கருத்து தெரிவிக்கையில் குடாக்கரை காணிப்பிரச்சினை மாத்திரமன்றி திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் அனைத்து காணிப்பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு தான் தொடர்ந்து முயற்ச்சித்துக்கொண்டிருப்பதாகவும்,  திருமலை மாவட்ட காணிப்பிரச்சினைகள் அனைத்தும் விரைவில் தீர்க்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் சீனக்குடா விகாராதிபதி சங்கைக்குறிய அலுத்ஓயா சத்தாதிஸ்ஸ, திமுத்துகம விகாராதிபதி சங்கைக்குறிய சேருவில ஜயதிஸ்ஸ, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பஸீர் மற்றும் குடியிருப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *