மைத்திரி தலைமையில் இடம்பெறவுள்ள முக்கிய கலந்துரையாடல்…!samugammedia

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகிய கட்சிகளை மீண்டும் சுதந்திரக் கட்சியில் இணைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்டர்கள் தலைமையில் நடைபெறுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுடன், கட்சியின் ஒழுக்காற்று சபை உறுப்பினர்களும் இதில் இணைந்து கொள்ளவுள்ளனர்.

பதவிகளைப் பெற்று அரசாங்கத்தில் இணைந்துள்ளவர்களை ஒன்றிணைத்து முன்னைய கலந்துரையாடல்கள் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் ஒன்றிணைவதற்காகவே இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

Leave a Reply