மக்களே அவதானம்…! வெளியான விசேட அறிவிப்பு…!samugammedia

நாட்டில் மலேரியா காய்ச்சல் பரவுவதில் அதிகரிப்பு காணப்படுவதாக மலேரியா கட்டுப்பாட்டு அமைப்பின் (MCC) அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்கள், இரத்தின வியாபாரிகள் மற்றும் இலங்கைக்கு திரும்பும் அமைதி காக்கும் படை வீரர்கள் ஆகியோரின் மூலம் இந்த நோய் இலங்கைக்கு காவப்படுகிறது.

MCC பணிப்பாளர் வைத்தியர் சம்பா அலுத்வீர ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில்,

ஆசிய நாடுகளில் அண்மைக் காலத்தில் கிட்டத்தட்ட 600,000 மலேரியா நோயாளிகள் உயிரிழந்திருப்பதாக கூறினார்.

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 25 ஆம் திகதி மலேரியா கட்டுப்பாட்டு பிரச்சார தினம் முன்னெடுக்கப்படுகிறது.

அதன்படி, மலேரியா மற்றும் கொசுக்களால் பரவும் நோய்கள் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக நாடு முழுவதும் 8,200 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

Leave a Reply