சஜித் விடுத்த கோரிக்கை..! உதறித் தள்ளிய ராஜித…!தொடரும் குழப்ப நிலை…!samugammedia

தாம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதாக ஐக்கிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவிடம் அறிக்கை விடுக்குமாறு அக்கட்சியின் தலைவர்கள் விடுத்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தலைமையின் கோரிக்கையின் பேரில் அந்த அறிக்கையை வெளியிடுவதற்குப் பதிலாக அவ்வாறான அறிக்கையை வெளியிடப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சில இடங்களில் தெரிவித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

கட்சியின் கருத்தை மீறி ராஜித சேனாரத்ன செயற்படுவதால் கட்சித் தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியும் விரக்தியும் ஏற்பட்டுள்ளதாகவும் கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சி மாற்றம் பற்றிய தகவல்களின் அடிப்படையில் கட்சியுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவதாக அறிக்கைகளை வெளியிடுமாறு அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் ராஜித சேனாரத்னவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.


Leave a Reply