தனியார் ஊழியர்கள் நாளை பணிக்கு செல்ல தேவையில்லை…! வெளியான அறிவிப்பு…!samugammedia

வடக்கு மாகாணத்தை சேர்ந்த தனியார் ஊழியர்கள் எவரும் நாளையதினம் பணிக்கு செல்ல தேவையில்லை என வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

நாளைய பொது முடக்கம் தொடர்பில் யாழ் ஊடக  அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் தலைவர் தலைவர் சாமிநாதன் சிவகுமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேவேளை தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து நடத்தும் நாளைய போராட்டத்திற்கு பூரண ஆதரவை நாம் வழங்குகின்றோம்.  அதேவேளை குறித்த போராட்டத்திற்கு அனைத்து மக்களும் ஆதரவு வழங்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply