நாளைய தினம் வடக்கு கிழக்கில் இடம்பெறவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கோரி தென்மராட்சியின் சாவகச்சேரி, கொடிகாமம் ஆகிய நகரங்களில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.





தமிழ்தேசிக் கூட்டமைப்பின் தென்மராட்சி தொகுதிக் கிளைத் தலைவரும் முன்னாள் உபதவிசாளருமான செ.மயூரன், சாவகச்சேரி முன்னாள் நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவான துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர்.





