யாழிலும் கடையடைப்பு

வடக்கு கிழக்கில் பூரண ஹார்த்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில். யாழ்ப்பாண மாவட்டத்தில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள், சந்தைகள் யாவும் மூடப்பட்டுள்ளன.

ஏழு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து, அரசினால் கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், வடகிழக்கில் அரசினால் மேற்கொள்ளப்படும் பௌத்த மயமாக்கல் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு கிழக்கில் இன்றைய தினம்(செவ்வாய்க்கிழமை)  முழுமையான கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தது.

யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவைகள் வழமை போல் இடம்பெறுகின்றன. தனியார் பேருந்து சேவைகள் இயங்கவில்லை.

முச்சக்கர வண்டி சேவையும் யாழ் நகரில் இடம்பெறுகின்றது. பொதுமக்கள் அங்காங்கே வீதிகளில் நடமாடுவதை அவதானிக்க முடிந்தது.

மேலும் சில உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் உட்பட அத்தியாவசிய சேவைகள் யாவும் வழமை போல் செயற்படுகின்றது.

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழக செயற்பாடுகளும் ஸ்தம்பித்து உள்ளதை அவதானிக்க முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *