பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவும், தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பௌத்தமயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவும் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருகோணமலையில் வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள் என்பன மூடப்பட்டிருந்தன.







பஸ் போக்குவரத்தும் குறைவாகவே இடம்பெற்றன. அத்துடன் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக பெண் சட்டத்தரணிகள் சிலர் கறுப்புநிற சேலையுடன் நீதிமன்றத்திற்கு வருகைதந்தமையையும் அவதானிக்க முடிந்தது.
திருமலையில் இடம்பெற்ற கடையடைப்பு போராட்டத்தில் பெருமளவான கடைகள் திறந்தே இருந்தன.
இங்கு 20 வீதமே வெற்றி எனலாம் குறிப்பாக பிரதான வீதி, என்.சி வீதி, மத்திய வீதி, 3ம் குறுக்குத்தெருவில் முஸ்லீம்கள் தமது கடைகளை அடைத்து ஆதரவு வழங்கியிருந்ததை அவதானிக்க முடிந்தது. தமிழர்களது கடைகளும் மூடப்பட்டு இருந்தன.
எனினும் தமிழர்களது ஆதரவு போதியளவு இருக்கவில்லை. 3ம் கட்டை சந்தி, நீதிமன்ற வீதியில் ஒருசில கடைகளும் மூடப்பட்டு இருந்தன. அனுராதபுரச் சந்தி பகுதியில் பெருமளவான கடைகள் திறந்தே இருந்தன.







