உடுவில் பாடசாலை விவகாரம் – மாணவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு! samugammedia

உடுவில் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆண் ஆசிரியர் ஒருவரால் மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் சுரண்டல் தொடர்பில் பாடசாலையை விட்டு வெளியேற்றப்பட்ட மாணவி  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதாவது குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆன் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் பாலியல் ரீதியான கருத்துக்களை தொடர்ச்சியாக பகிர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த ஆசிரியர் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் மாணவி ஒருவர் தனக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்பில் பாடசாலை அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் குறித்த மாணவி வழங்கிய தகவலுக்கு நடவடிக்கை எடுக்காத பாடசாலை அதிபர் பாடசாலையில் இருந்து  மாணவியை வெளியேற்றியதாக மாணவி தரப்பால் குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் நிலையில், கடந்த 18ஆம் திகதி சுன்னாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply