பொன்னியின் செல்வன் 3-இல் பிக்பாஸ் ஜனனி…! ஷாக்கான ரசிகர்கள்…!samugammedia

நடிகர் கமல்காஹசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன்6 நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து  போட்டியாளராக கலந்துகொண்டவர்தான் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனி.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன்6 இல் பல இலட்சக்கணக்காணோரின் பேராதரவை பெற்ற போட்டியாளராக இவர் காணப்பட்டார்.

இவ்வாறானதொரு நிலையில் பிக்பாஸ் சீசன்  நிறைவடைந்த நிலையில் ஜனனிக்கு திரையுலகில் நடிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதாவது யாருமே எதிர்பாராத வண்ணம் இளையதளபதி விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி67 திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இவ்வாறானதொரு நிலையில் மணிரத்தினத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் இடம்பெற்றது. 

இந்நிலையில் குறித்த நிகழ்வுக்கு ஜனனியும் கலந்து கொண்டுள்ளமை அவரும் பொன்னியின் செல்லவன் 2 திரைப்படத்தில் நடிக்கின்றாரா என்ற கேள்வியை அவரது ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

பொன்னியின் செல்வன் பாகம் 3 இல் எப்பொழுது நடிக்க போகிறீர்கள் என தொகுப்பாளினி ஒருவர் வினவிய கேள்விக்கு,  இப்படியான கேள்விகள் எல்லாம் கேட்க கூடாது எனவும் அது இப்போதைக்கு சொல்ல முடியாது ரகசியம் என்றும் சூட்சுமமாக பதிலளித்துள்ளார்.  

தொடர்ந்தும் அவர் இயக்குனர் மணிரத்னம் அவர்களை சந்தித்து பேசினால் அவருடைய படம் ஒன்றில் ஏதாவது ஒரு பகுதிக்கு வாய்ப்பு தருமாறு கேட்பேன் எனவும் அதுவே பமிக பெரிய வரம் எனவும் தெரிவித்துள்ளமை ஜனனி பொன்னியின் செல்வன் பாகம் 3 இடம்பெறுவாரா என ரசிகர்களின் மனதில் மென்மேலும் கேள்விக் கணைகளை தொடுத்துள்ளது.

Leave a Reply