யாழில் தந்தை செல்வா சதுக்கத்தில் இருந்த முக்கிய பொருள் திருட்டு…! பராமரிப்பாளர்கள் ஆதங்கம்…!samugammedia

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு முன்றலில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த இடி தாங்கி மற்றும் 80 அடி நீளமான இடி தாங்கிக்குரிய செப்பிலான இணைப்பி திருடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தை செல்வா சதுக்கத்தில் நீண்ட காலமாக நீர் இறைக்கும் மோட்டர் திருட்டும் இடம் பெறுவதாக தந்தை  செல்வா சதுக்க பராமரிப்பாளர்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.
கிட்டத்தட்ட மூன்று தடவைக்கு ரூபா 75ஆயிரம் பெறுமதியான நீர் இறைக்கும் மோட்டர் திருடப்பட்டுள்ளதாகவும் திருட்டு தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதியப்பட்டுள்ள போதிலும் தொடந்து திருட்டு இடம்பெறுவதாகவும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள தந்தை செல்வா சதுக்க வளாகத்தில் திருட்டு சம்பவங்கள் இடம்பெறுவது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply