யாழிற்கு படையெடுக்கும் இந்திய பிரபலங்கள்…! வரவேற்க காத்திருக்கும் யாழ்ப்பாணிஸ் ரசிகர்கள்…!samugammedia

கடந்த சில வாரங்களாக அடுத்தடுத்து தென்னிந்திய திரையுலகின் முக்கிய நடிகர்கள் இசைத்துறையினர் மற்றும் பிக்பாஸ் பிரபலங்கள் என இலங்கையை நோக்கிய படையெடுத்து  வருகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில் தற்போது மேலும் சில விஜய் டிவி பிரபலங்களும் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

அதாவது வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள முற்றவெளி மைதானத்தில் Araa entertainment  நடத்தும் இசை நிகழ்ச்சியில் பாடுவதற்காக பல சூப்பர் சிங்கர் பிரபலங்கள் வருகைதரவுள்ளனர். அந்தவகையில் ஸ்ரீதர் சேனா,மானசி ,ஹரிப்பிரியா உள்ளிட்ட பலரும் வருகை தர இருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாது கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியிலிருந்தும் ஒரு சில பிரபலங்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

மேலும், மூக்குத்தி முருகன், ஷாம் விஷால், குரேஷி ஆகிய விஜய் டிவி பிரபலங்களும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த பிரபலங்களின் வரவினையும் எதிர்பார்த்து யாழ்ப்பாண ரசிகர்கள் காத்திருக்கின்றார்கள்.

Leave a Reply