கச்சதீவில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது – யாழ்.ஆயர் இல்லம்

கச்சதீவில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டுவிட்டதாக யாழ்.ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.

ஆயர் இல்லம் சார்பில் யாழ்.மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த விடயத்தை கடற்படையின் உயர் அதிகாரிகள் ஆயர் இல்லத்துக்கு அறிவித்துள்ளனர்.

அங்கு அமைக்கபட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டு கச்சதீவுக்கு வெளியில் கொண்டுசெல்லப்பட்டுவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கச்சதீவில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதாகவும் இந்த விடயத்தில் தாங்கள் கவனமெடுத்து கச்சதீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்பட ஆவண செய்யுமாறும் கோரி யாழ்.மறை மாவட்ட குரு முதல்வர் கடந்த மார்ச் 27ல் கடிதமூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த விடயத்தை அமைதியான முறையில் தீர்த்துவைக்க ஒத்துழைப்பு வழங்கிய கடற்படை உயர் அதிகாரிகளுக்கும், கச்சதீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்பட வேண்டும் என குரல் கொடுத்த அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் யாழ்.ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.

Leave a Reply