கடற்றொழில் அபிவிருத்திக்கு சவுதியின் ஒத்துழைப்பை பெற முயற்சி!samugammedia

கடற்றொழில் செயற்பாடுகளை முன்னேற்றுவதற்கு் சவுதி அரசாங்கத்தின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வது தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் அமைச்சிற்கு இன்று(27.04.2023) வருகைதந்த இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடலின் போதே குறித்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டது.
கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகளை நாடளாவிய ரீதியில் முன்னேற்றும் நோக்கில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய பல்வேறு திட்ட முன்வைரைபுகள் தயார்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றினை நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்தழைப்புக்களை சவுதி அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்வது தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply