யாழ்ப்பாணத்தில் நாளை இடம்பெறவுள்ள இசை நிகழ்வில் பங்கேற்கவுள்ள இந்தியக்கலைஞர்கள் பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வந்தடைந்தனர்.
இந்தக் குழாமில் விஜய் டி.வி. சூப்பர் சிங்கர் புகழ் பாடகர்களான சாம் விஷால், ஸ்ரீதர் சேனா, மூக்குத்தி முருகன், மானசி, ஹரிபிரியாவுடன் கலக்கப்போவது யாரு புகழ் காமெடி நடிகர் குரேஷியும் உள்ளனர்.

முற்றவெளி திறந்த அரங்கில் கலை நிகழ்வு
இவர்கள் பங்கேற்கும் மாபெரும் கலை நிகழ்வு நாளை மாலை யாழ். முற்றவெளி திறந்த அரங்கில் நடைபெறவுள்ளது.
அதேவேளை கடந்த நாட்களில் கடைதிறப்புவிழாவிற்காக நடிகை ஜனனி ஐயர் யாழிற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


The post யாழ் வரும் இந்திய கலைஞர்கள் appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.