திருமலையில் இடம்பெற்ற பல்லின கலை இலக்கிய விழா…!samugammedia

திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட பல்லின கலை இலக்கிய விழா இன்று மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம தலைமையில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டம் என்பது பல்லின மக்கள் ஓரளவு சரிசமமாக வாழும் மாவட்டமாகும்.நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் வகையில் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகம் இந்நிகழ்வை நடாத்துவதற்கான நிதி ஏற்பாடுகளை வழங்கியிருந்தது.இதன் மூலம் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்துவதே இதன் மூல நோக்கமாக அமைவதாக அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.
கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல், தலையணை அடி, சங்கீத கதிரை உள்ளிட்ட பல போட்டிகள் நடாத்தப்பட்டதுடன் பரிசில்களும் வழங்கி் வைக்கப்பட்டன.
சிங்கள, தமிழ், இஸ்லாம் மற்றும் கிறிஸ்த்தவ சமயங்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இதன்போது அரங்கேறின.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஆரியவதி கலப்பத்தி, மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மேலதிக அரசாங்க அதிபர் ( காணி) எஸ்.சுதாகரன், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், சக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *