வவுனியாவில் மாட்டை களவாடி இறைச்சிக்காக வெட்டிய திருடர்கள்…!samugammedia

வவுனியாவில் தொழுவத்தில் இருந்த பசு மாட்டினை திருடி இறைச்சிக்காக வெட்டப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவமானது வவுனியா கல்வீரங்குளத்தில் இடம்பெற்றிருந்தது.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

நேற்று மாலை தொழுவத்தில் கட்டப்பட்ட பசு மாட்டினை காணாத நிலையில் மாட்டின் உரிமையாளர் மற்றும் அயலவர்கள் பசு மாட்டினை தேடிய நிலையில் இறைச்சிக்காக வெட்டப்பட்ட நிலையில்  மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சிதம்பரபுரம் பொலிஸாருக்கு இச்சம்பவம் குறித்த விடயம் தொடர்பாக அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான விசாரணையினை முன்னெடுத்து வருகின்றனர்.

அண்மைக்காலமாக வவுனியா மாவட்டத்தில் பரவலாக மாடு களவாடப்பட்டு வெட்டப்படுகின்ற செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *