அம்மாவும் அப்பாவும் மன்னிக்கவும் – கடிதம் எழுதிவிட்டு உயிரை மாய்த்த 18 வயது இளைஞன்..! samugammedia

இரத்தினபுரி, வரக்காகொட பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அம்மாவும் அப்பாவும் மன்னிக்கவும், எனக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளன. காதலையும் இழந்து விட்டேன் என கடிதம் எழுதி வைத்துவிட்டு 18 வயதான இளைஞன் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கவிந்து என்ற அவிஷ்க கருணாரத்ன என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் மட்டும் வீட்டில் இருந்ததாகவும் தாய், தந்தை மற்றும் மூத்த சகோதரர் ஆகியோர் வேலை நிமித்தம் வெளியில் சென்றுள்ளனர். இளைய சகோதரர் பாடசாலைக்கு சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் தாயார் பாலர் பாடசாலை ஆசிரியை எனவும், பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்த போது, ​​வீட்டின் முன் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மகனின் சடலத்தை கண்டதாக தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞன் எழுதியதாகக் கூறப்படும் கடிதம் வீட்டின் வரவேற்பறையில் உள்ள தொலைக்காட்சிக்கு அருகிலும் அவரது கைத்தொலைபேசி படுக்கையில் இருந்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த கைத்தொலைபேசியில் இளைஞன் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட செல்பி புகைப்படமும் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞன் எழுதிய கடிதத்தின் கீழே இரண்டு தொலைபேசி இலக்கங்கள் எழுதப்பட்டிருந்தமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த கடிதத்திலுள்ள கையெழுத்து உயிரிழந்த இளைஞனுடையது என அவரது தாயினால் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply