திக்வெல்லவில் சற்றுமுன் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்…!samugammedia

திக்வெல்ல – வலஸ்கல-தெமடபிட்டிய சந்தியில், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் திக்வெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் தெமட்டபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே காயமடைந்துள்ளார்.

தெமட்டபிட்டிய சந்தியில் வெற்றிலைக் கடை நடத்தி வந்த இவர், நேற்று (27) இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை

Leave a Reply