சாகலவுக்கு பொன்னாடை போர்த்தி விழுந்தெழும்பிய ஈ.பி.டி.பி உறுப்பினர்..! யாழில் சம்பவம்…!samugammedia

பெரும்போகத்தில் நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டம் மற்றும் இலங்கை இராணுவத்தின் மேலதிக பங்களிப்புடன் வறிய குடும்பங்களுக்கான இலவச அரிசிப் பொதி வழங்கும் நிகழ்வு வேலணை பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இதன் முதல் நிகழ்வு வேலணை பிரதேச செயலகத்தில் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு ஜனாதிபதி பனிக்குழுவின் தலைவர் சாகலரட்நாயக்க உரையாற்றிக் கொண்டிருக்கும்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சாகல நாயக்காவுக்கு பொன்னாடை போர்த்தி விட்டு மேடையை விட்டு கீழே இறங்கும் போது மேடையின் படித்தடக்கி விழுந்து எழும்பிய சம்பவத்தால் நிகழ்வில் சலசலப்பு ஏற்பட்டது

இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பியும் பாஸ்குவல், ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்க, இலங்கை இராணுவத் தளபதி விக்கும் லியனகே, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ. சிவபாலசுந்தரம், வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்,வடபகுதி கடற்படை கட்டளை அதிகாரி,இலங்கை இரானுவத்தின் 51கட்டளை தளபதி, வேலணை பிரதேச செயலர் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply