இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு: மலேசிய பினாங் துணை முதலமைச்சர் கோரிக்கை…!samugammedia

இலங்கையில் தமிழர்களுக்கான கண்ணியமான அரசியல் தீர்வு தொடர்பில், ஏற்கனவே மலேசிய பினாங்கில் நடைபெற்ற சர்வதேச தமிழ் மாநாட்டில் ஈழத்தமிழர்களுக்கு பொதுவாக்கெடுப்பு யோசனை முன்வைக்கப்பட்டது என்று பினாங்கின் துணை முதலமைச்சர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

இந்த முன்மொழிவு 2015 இன் பினாங்கு பிரகடனம் என்று அழைக்கப்படுகிறது என்றும் ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களுக்கான வாக்கெடுப்பு, தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வுக்கான சர்வதேச சமூகத்தின் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலிருந்து ஒரு வழியை வழங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுதம் ஏந்திய விருப்பம் தீர்ந்த பின்னரே, தமிழர்களின் விடுதலை தாகத்தைத் தீர்ப்பதற்கு மிகவும் ஜனநாயக மாற்றுத் தீர்வு முன்வைக்கப்பட்டது.

இதனடிப்படையில், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு பொதுவாக்கெடுப்பு என்ற கருத்தை உலகத் தமிழ் மாநாடுகள் முன்வைத்துள்ளன.

ஜனநாயகம், சமாதானம் மற்றும் நீதி ஆகிய சர்வதேச விதிமுறைகளுக்கு இணங்கவே இத்தகைய முன்னோக்கிய வழி இருப்பதாக பினாங்கின் துணை முதலமைச்சர் கூறியுள்ளார்.

ஸ்கொட்லாந்து அல்லது கியூபெக் போன்ற பிற நாடுகளுக்கு வாக்கெடுப்பு நடத்தப்படுமானால், நீண்டகாலமாக ஒடுக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு சர்வதேச அளவில் கண்காணிக்கப்படும் பொது வாக்கெடுப்பு அரசியல் வழியாக இருக்க முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொடூரமான தமிழ் இனப்படுகொலை நடந்து 13 வருடங்கள் கடந்தும், ஈழத் தமிழர்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார விடுதலைக்காக சர்வதேச சமூகத்தின் மூலம் உறுதியான எதுவும் வெளிவரவில்லை.

இந்தநிலையில் தமிழர்களின் விடுதலைக்கான கண்ணியமான ஜனநாயக தீர்வு என்பது ஜீரணிக்க கடினமான ஒன்றா? என்று மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்

Leave a Reply