7 பெண்களால் வேட்டையாடப்பட்ட இளம் பிக்கு- அச்சத்தில் ஆண்கள்!samugammedia

இளம் பிக்கு ஒருவரை 7 பெண்கள் இணைந்து கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குருநாகல் நிக்கவரெட்டிய பிரதேசத்திலே இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள பௌத்த 22 வயதுடைய பிக்கு ஒருவர் தங்கியிருந்த விகாரைக்குள் புகுந்த 7 பெண்கள் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்பட்டுள்ளது.  

சம்பவ தினத்தன்று குறித்த  பிக்கு விகாரைக்குள் இருக்கும் பொழுது  பெண்ணொருவர் அவரை அழைத்தமையால்  யார் தன்னை அழைக்கின்றனர் என பார்ப்பதற்காக வெளியில் சென்ற பொழுதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர்களான பெண்கள், பிக்குவை விகாரையில் இருந்து விலகுமாறு கூறியுள்ளனர்.

அத்துடன் காவி உடையை கழற்றுமாறு கடும் அழுத்தங்களை கொடுத்துள்ளதுடன்,  உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும்  அந்த  இளம் பிக்கு தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் காரணமாக உண்டான  உடல் மற்றும் மன ரீதியான அழுத்தங்கள் காரணமாக பிக்கு புத்தள வைத்தியசாலையில் அனுமதிப்பட்டு தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply