வடக்கில் நோர்த் சிற்றி…!தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருடன் கைகோர்கவுள்ள சீனா.! வெளியான அதிர்ச்சி…! samugammedia

கடற்தொழில் அமைச்சு என்ற வகையில் தேசிய உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வடக்கு கடலட்டைப்பண்ணை இறால் பண்ணை நண்டுப் பண்ணை என
ஆரம்பிக்கப்பட்டு உற்பத்தியாளர்கள் கணிசமான இலாபத்தினை அதன்மூலம் பெற்றுக்கொள்ளவதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சபையில் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சில தமிழ் அரசியல்வாதிகள் பொய்யான வதந்திகளை பரப்பி வருவதாக அமைச்சர் குற்றம் சுமத்தியிருந்தார்.

நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்திருந்தார்.

வடக்கில் சீனாவிற்கு காணி வழங்கப்பட்டுள்ளதாக பொய்யான வதந்தி பரப்பபட்டதாவும், தமிழக மீனவர்களையும் ஈழத்து மீனவர்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தாக டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டள்ளார்.

இந்நிலையில் வடக்கில் சீனாவுடன் இணைந்து நோர்த் சிற்றி ஒன்றை சிறிதரன் கட்டவுள்ளதாக அமைச்சர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக சிறினிகளுக்கும் சாணிகளுக்கும் சுமிகளுக்கும் சாளிகளுக்கும் ஆகியவர்களின் கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை சிறினிகள் என்பது சிறிதரனையும் சாணிகள் என்பது சாணக்கியனையும், சுமிகள் என்பது சுமந்திரனையும் சாளிகள் என்பது சார்ள்ஸ் நிர்மலநாதனையும் குறிக்கின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply