சர்வதேச சிவப்பு பிடியாணை விதிக்கப்பட்ட குடு அஞ்சு பிரான்சில் கைது…!களத்தில் CID …!samugammedia

சர்வதேச சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த பாதாள உலக தலைவரான குடு அஞ்சு பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸில் தற்போது தங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் சக்தி வாய்ந்த பாதாள உலகக் கும்பல் தலைவன் என்றும் போதைப்பொருள் வியாபாரி என்றும் பொலிசார் குறிப்பிட்டிருந்தாக வெளிநாட்டுச் செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த நபர் இரத்மலானை கோணக்கோவில பிரதேசத்தில் வசிப்பவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது

நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையிலான தனிப்பட்ட தகராறு காரணமாக மனைவி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த குற்றவாளியை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கவனம் செலுத்தியுள்ளனர்.

Leave a Reply