இதுவரை வெளிவராத உண்மைகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும்-பலரின் முகத்திரைகளுக்கு ஆபத்து.!samugammedia

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக, இதுவரை வெளிவராத உண்மைகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடவுள்ளதாக இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹரோல்ட் அந்தோனி பெரேரா தெரிவித்துள்ளார்.

அதில் உள்ள தகவல்களை அவதானிப்பது மிகவும் தீவிரமானது என்றும் எனவே இதற்காக சட்டத்தரணியின் உதவியையும் நாடவுள்ளதாக ஹரோல்ட் அந்தோனி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

தற்கொலை தாக்குதல்களின் அறிக்கைகள் அடங்கிய ஆறு குறுந்தகடுகளை (சிப்) கடந்த வார இறுதியில் மறைமாவட்டத் தலைவரிடம் பொது பாதுகாப்பு அமைச்சர் கையளித்திருந்தார்.

இந்த விசாரணை அறிக்கைகள் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply