இலங்கையின் நிலையே எமக்கும் ஏற்படும்- எச்சரிக்கை விடுத்த இம்ரான் …!samugammedia

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைவர் இம்ரான் கான், தேர்தல் நடத்தப்படாவிட்டால் நாட்டில் வன்முறைப் போராட்டங்கள் வெடிக்கும் எனவும் இலங்கை போன்ற ஒரு சூழ்நிலையை பாகிஸ்தான் எதிர்கொள்ளும் எனவும் தனது‘வலிமையான மக்களுக்கு’ தான் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

“இது ஒரு எச்சரிக்கை அல்ல, இது எனது பகுப்பாய்வு; விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் இதுவரை கட்சி பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் அமைதியாக இருந்து வருகின்றனர்.

எவ்வாறாயினும், அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டால், அவர்கள் வீதிக்கு வருவார்கள், நிலைமையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது, ” என முன்னாள் பிரதமர் நேற்று வீடியோ இணைப்பு மூலம் கட்சி ஊழியர்களுடன் உரையாடும் அமர்வில் உரையாற்றியிருந்தார்.

Leave a Reply